Monday, November 9, 2009

எப்படி .DOCX வகை கோப்புகளை திறப்பது

இன்று கணினி உபயோக படுத்தும் பெரும்பானவர்கள் உபயோக படுத்துவது மைக்ரோ ஸொப்த்(Micro soft) ஆபீஸ் தான். மைக்ரோ ஸொப்த் சென்ற ஆண்டு ஆபீஸ் 2007 தொகுப்பை வெளி விட்டது. இதன் சேமிக்கும் கோப்பின் வகை (வோர்ட் = .docx. Excel = xlsx ) இதன் முந்தைய தொகுப்பின் வகையின் முடிவு பெயர் உடன் ஒரு x சேர்க்க பட்டுள்ளது. அதாவது ( doc - docx ஆகவும் , xls - xlsx ஆகவும் , ppt - pptx ஆகவும்) மாற்றம் செய்ய பட்டுள்ளது. இன்று கணினி உபயோக படுத்தும் பெரும்பானவர்கள் 2007 தொகுப்புக்கு முந்தைய பதிப்பையே வைத்துள்ளனர் , ஆனால் யாராவது 2007 தொகுப்பில் உருவாக்கிய கோப்பை நமக்கு அனுப்பும் போடு அது .docx வகையாக இருந்தால் அதனை நாம் திறந்து பார்க்க முடியாது. எனென்றால் புதிய வகையை திறந்து பார்க்க பழைய தொகுப்பில் வசதி இல்லை , இந்த குறைபாட்டை நீக்க, பழைய தொகுப்பில் புதிய வகையை திறந்து பார்க்க மைக்ரோ ஸொப்த் ஒரு சிறிய தொகுப்பை கொடுத்துள்ளது. அதன் தளத்திருக்கு செல்ல இங்கே சொடுக்கவும். இங்கே . இந்த தளத்தில் அதனை உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து , அதை உங்கள் கணினியில் பதிந்து கொண்டாள், நீங்கள் புதிய வகைகள் கோப்பை ஆபீஸ் 2007 தொகுப்பு இல்லாமலேயே திறக்க முடியும்.

உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் பின்னோட்டத்தில் தெரிவிக்கலாம்