Monday, November 9, 2009

எப்படி .DOCX வகை கோப்புகளை திறப்பது

இன்று கணினி உபயோக படுத்தும் பெரும்பானவர்கள் உபயோக படுத்துவது மைக்ரோ ஸொப்த்(Micro soft) ஆபீஸ் தான். மைக்ரோ ஸொப்த் சென்ற ஆண்டு ஆபீஸ் 2007 தொகுப்பை வெளி விட்டது. இதன் சேமிக்கும் கோப்பின் வகை (வோர்ட் = .docx. Excel = xlsx ) இதன் முந்தைய தொகுப்பின் வகையின் முடிவு பெயர் உடன் ஒரு x சேர்க்க பட்டுள்ளது. அதாவது ( doc - docx ஆகவும் , xls - xlsx ஆகவும் , ppt - pptx ஆகவும்) மாற்றம் செய்ய பட்டுள்ளது. இன்று கணினி உபயோக படுத்தும் பெரும்பானவர்கள் 2007 தொகுப்புக்கு முந்தைய பதிப்பையே வைத்துள்ளனர் , ஆனால் யாராவது 2007 தொகுப்பில் உருவாக்கிய கோப்பை நமக்கு அனுப்பும் போடு அது .docx வகையாக இருந்தால் அதனை நாம் திறந்து பார்க்க முடியாது. எனென்றால் புதிய வகையை திறந்து பார்க்க பழைய தொகுப்பில் வசதி இல்லை , இந்த குறைபாட்டை நீக்க, பழைய தொகுப்பில் புதிய வகையை திறந்து பார்க்க மைக்ரோ ஸொப்த் ஒரு சிறிய தொகுப்பை கொடுத்துள்ளது. அதன் தளத்திருக்கு செல்ல இங்கே சொடுக்கவும். இங்கே . இந்த தளத்தில் அதனை உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்து , அதை உங்கள் கணினியில் பதிந்து கொண்டாள், நீங்கள் புதிய வகைகள் கோப்பை ஆபீஸ் 2007 தொகுப்பு இல்லாமலேயே திறக்க முடியும்.

உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் பின்னோட்டத்தில் தெரிவிக்கலாம்

Thursday, October 15, 2009

வாழ்த்து மடல்

வாழ்த்து மடல்









புதிய தொழில் நுட்பம் பழைய வழக்கத்தை மறக்க செய்கிறது.
அப்படி நாம் மறந்த வழக்கத்தில் என்னை மிகவும் பாதித்தது கடிதம் மற்றும் வாழ்த்து மடல் அனுப்பும் பழக்கத்தை. குறிப்பாக கை பேசி வந்த பிறகு கடிதம் என்று ஒன்று இருப்பதையே அனைவரும் மறந்து விட்டனர். கடிதம் என்பது வெறும் தகவல் அளிக்கும் சாதனம் மட்டும் அல்ல , அடையும் தாண்டி அது ஒரு ஞாபக பொக்கிஷம். அதை போன்று தான் முன்பு ஏதேனும் ஓர் பண்டிகை அல்லது பிறந்த நாள் என்றால் அனைவரும் எதிர் பார்த்த ஒன்று வாழ்த்து மடல். அது சில வருடங்களுக்கு பிறகு அந்த நபரின் ஞாபக சின்னமாக என்றும் நம் மனதில் தங்கி இருக்கும் . ஆனால் இன்று கை பேசியில் ஒரு குறுந் தகவல் அனுப்பினால் அதை அன்றே அதை கை பேசியில் இருந்து மட்டும் அல்ல, நம் நினைவில் இருந்தும் அழித்து விடுகின்றோம். வாழ்த்து மடல் ஏற்படுத்திய தாக்கத்தை இன்று கை பேசியின் குறுந் தகவல் ஏற்படுத்தவில்லை என்பது அனைவரும் ஒத்து கொள்ளும் ஒரு உண்மை. முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கு ஒரு வாழ்த்து மடல் அனுப்பலாமே!
இதை பற்றிய உங்கள் கருத்தை பின்னோட்டத்தில் தெரிவிக்கலாம்.

தீபாவளி வாழ்த்துக்கள்
















தீபாவளி கொண்டாடும் அணைத்து மக்களுக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள். தீபாவளி இதை நினைக்கும் போதே அனைவருக்கும் சந்தோசம் வரும். குறிப்பாக பெரியவர்களை விட சிறியவர்கள் மிகவும் ரசிக்கும் பண்டிகை தீபாவளி.













பட்டாசு பட்டாசு பற்றி தனி பதிவே போடலாம். பட்டாசு பல வகை ஒவ்வொன்றும் தனி தன்மை. சிறு வயதில் குறிப்பாக வெடி வகைகள் விரும்பி வெடித்தோம் . ( லட்சுமி வெடி, அணு குண்டு, குருவி வெடி, மிளகாய் வெடி ) ஆனால் இப்போது வெடி வகையை விட மத்தாப்பு, சங்கு சக்கரம், வானில் வெடிக்கும் ராக்கெட் போன்ற வெடிகள் தான் பிடிக்கிறது. எந்த வெடி வெடித்தாலும் கவனமாக வெடித்தால் இனிய விழாவாக அமையும்.

அனைவருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

அம்புலி மாமா

தமிழ் வலை பூ தளத்திற்கு எனது கன்னி பதிவு.

சிறு வயதில் நானும் என்னை போல் பலரும் விரும்பி படித்த புத்தகத்தில் முதன்மையானது அம்புலி மாமா என்றால் அது மிகையாகது. அண்மையில் நான் வலை தளத்தை மேய்ந்து கொண்டிருந்த போது எனக்கு இந்த வலை தள முகவரி கிடைத்தது. பல மொழிகளில் அம்புலி மாமா புத்தகம். குறிப்பாக தமிழில் 1947 ஆண்டு முதல் 1985 ஆண்டு வரை அணைத்து மாத புத்தகமும் நாம் தேர்தெடுக்குமாறு அமைந்துள்ளது சிறப்பு அம்சமாகும். என்னை போல் பழைய நினைவை நினைத்து மகிழ்பவர்களுக்காக இந்த வலை தளம் .


அனைவருக்கும் பிடித்திருக்கும் என எண்ணுகிறேன், பிடித்திருந்தால் பின்னோட்டத்தில் தெரிவிக்கவும். மீண்டும் மற்றும் ஒரு புதிய முயற்சியுடன் சந்திக்கிறேன்.