Thursday, October 15, 2009

வாழ்த்து மடல்

வாழ்த்து மடல்









புதிய தொழில் நுட்பம் பழைய வழக்கத்தை மறக்க செய்கிறது.
அப்படி நாம் மறந்த வழக்கத்தில் என்னை மிகவும் பாதித்தது கடிதம் மற்றும் வாழ்த்து மடல் அனுப்பும் பழக்கத்தை. குறிப்பாக கை பேசி வந்த பிறகு கடிதம் என்று ஒன்று இருப்பதையே அனைவரும் மறந்து விட்டனர். கடிதம் என்பது வெறும் தகவல் அளிக்கும் சாதனம் மட்டும் அல்ல , அடையும் தாண்டி அது ஒரு ஞாபக பொக்கிஷம். அதை போன்று தான் முன்பு ஏதேனும் ஓர் பண்டிகை அல்லது பிறந்த நாள் என்றால் அனைவரும் எதிர் பார்த்த ஒன்று வாழ்த்து மடல். அது சில வருடங்களுக்கு பிறகு அந்த நபரின் ஞாபக சின்னமாக என்றும் நம் மனதில் தங்கி இருக்கும் . ஆனால் இன்று கை பேசியில் ஒரு குறுந் தகவல் அனுப்பினால் அதை அன்றே அதை கை பேசியில் இருந்து மட்டும் அல்ல, நம் நினைவில் இருந்தும் அழித்து விடுகின்றோம். வாழ்த்து மடல் ஏற்படுத்திய தாக்கத்தை இன்று கை பேசியின் குறுந் தகவல் ஏற்படுத்தவில்லை என்பது அனைவரும் ஒத்து கொள்ளும் ஒரு உண்மை. முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கு ஒரு வாழ்த்து மடல் அனுப்பலாமே!
இதை பற்றிய உங்கள் கருத்தை பின்னோட்டத்தில் தெரிவிக்கலாம்.

No comments: